குரங்குகள் அட்டகாசம்! 5 வயது குழந்தையை தாக்கிய சம்பவம்…

Estimated read time 1 min read

உத்தரப் பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் கண் முன் எது நடந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் செல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி தான், உத்திரபிரதேசத்தில் 5 வயது சிறுவன் ஒருவனை குரங்கு கூட்டம் ஒன்று கொடூரமாக தாக்குவதை பார்த்தும் பார்க்காதது போல இருவரும் செல்லும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) பிருந்தாவனில் உள்ள மதன் மோகன் கெரா பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வேகமாக வெளிய வந்தபோது குரங்கு கூட்டம் அந்த ஏரியாவில் இருந்தது. அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு கோவில் படிகளில் இருந்து குழந்தை வேகமாக ஓடியபோது குரங்கு அந்த சிறுவனை பிடித்து கீழே தள்ளியது.

தள்ளியவுடன் அதனுடன் இருந்த குட்டி குரங்கு ஒன்றும் சேர்ந்து சிறுவனை கடுமையாக தாக்கியது. இதனை அங்கிருந்த பெண்கள் சிலர் பார்த்து கொண்டு சிறுவனுக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் தைரியம் இல்லாமல் பயத்துடன் பார்த்துக்கொண்டே நடந்து சென்றார்கள். சிறுவன் குரங்கு தாக்குதல் தாங்கமுடியாமல் கதறி அழுதான்.

मथुरा में बंदरों का आतंक, 5 साल के मासूम बच्चे पर बंदरों ने किया अटैक, स्थानीय लोगों ने दौड़कर बचाई बच्चे की जान, लाइव घटना सीसीटीवी में कैद@dmmathura7512 pic.twitter.com/nUjbATcbd0

— Pramod Kumar (@journalistpk123) July 13, 2024

பிறகு அந்த தெரிவில் இருந்த ஒருவர் வேகமாக வந்து குரங்குகளை துரத்த குரங்குகள் சிறுவனை விட்டு ஓடியது சிறுவன் அழுது கொண்டே சென்றான். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் இதுபோன்ற மனித-விலங்கு சந்திப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author