பிப்ரவரி 27-இல் கேரளா வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி கேரளா வருகிறார்.

2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது.  இதற்கான  முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக  கேரள பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை  நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, காசர்கோடு முதல் தான் மேற்கொண்டு வரும் நடைபயணம், பிப்ரவரி 27ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைவதாக தெரிவித்துள்ளார். நிறைவு விழா மத்திய விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் கேரளா வர உள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்போது பல்வேறு  நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கிறார். கடந்த மாதம் நடிகர் சுரேஷ் கோபியின் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கேரளா வந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author