மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. இதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். நாளை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜுந்தார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி வழங்க மறுத்த தர்மேந்திரா பிரதான் சென்னைக்கு வந்தால் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜுந்தாரை கண்டித்து நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தர்மேந்திரா பிரதானியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் உணர்வெழுச்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.