சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் உலக இயந்திர மனிதர் தொழில் நுட்பச் செயல்திறன் போட்டிக்கான தொடக்க விழா, பிப்ரவரி 27ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹைய்சியோங், சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞரும், கட்டுப்பாட்டு அறிவியல் மற்றும் பொறியியல் நிபுணருமான கோ லெய் முதலியோர் துவக்க விழாவில் பங்கெற்றனர்.
உலகளவில் முன்னணியில் உள்ள இயந்திர மனிதர் தொழில் நுட்ப ஆராய்ச்சி குழுக்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவை இதில் கலந்து கொள்கின்றன. உலகளவில் முதல் தர இயந்திர மனிதர் போட்டிக்கான மேடையை வழங்குவது இப்போட்டியின் இலக்காகும்.