சீனத் தேசிய கணினி வைரஸ் அவசர கையாள்தல் மையம், கணினி வைரஸ் தடுப்புக்கான தேசிய திட்டப்பணி ஆய்வகம், 360 தரவு பாதுகாப்புக் குழு ஆகியவை ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் சிறப்பு அறிக்கை ஒன்றை கூட்டாக வெளியிட்டன. அமெரிக்காவில் பல நிறுவனங்கள் வோல்ட் டைஃபான் Volt Typhoon நடவடிக்கைகளைத் தொடுத்தன. சீனாவின் இணையத் தாக்குதல் எனும் கூறப்படும் அச்சுறுதலை தூண்டிவிடுவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையக் கண்காணிப்பு வலுப்படுத்துவதும் இந்நடவடிக்கையின் நோக்கமாகும். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அமெரிக்க அரசின் சட்டப்பூர்வமற்ற கண்காணிப்பு மற்றும் தாக்குதல் தொடர்ந்து வருவதால், அமெரிக்க அரசின் சர்வதேச கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க அரசு மீதான நம்பிக்கையும் இழக்கும் என்று இதில் 91.7 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர் தெரிவித்தனர்.