தற்போது ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அமெரிக்காவிடமிருந்து மிக அதிக உதவி பெறும் நாடாக பிலிப்பைன்ஸ் திகழ்கிறது. இந்த உதவியில் பெரும்பகுதி இராணுவம் தொடர்பானது. இராணுவ உதவிகள் மூலம், பிலிப்பைன்ஸிலுள்ள அதன் செல்வாக்கை நீண்ட காலமாக அமெரிக்கா நிலைநிறுத்த விரும்புகின்றது., ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அமெரிக்காவின் இராணுவ மேம்பாட்டை மீண்டும் உருவாக்குவது அமெரிக்காவின் இச்செயலின் நோக்கமாகும். இதனால், தென் சீனக் கடலில் சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காப்பதற்கான செலவு அதிகரிக்கும். அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் இச்செயல், பிராந்திய இராணுவப் போட்டியைத் தீவிரப்படுத்தி பிராந்தியத்திற்கு கொந்தளிப்பைக் கொண்டுவருகின்றது.
இந்நிலையில் அண்மையில் சீனாவும் ஆசியான் நாடுகளும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவு ஒத்துழைப்பைத் தொடர்ந்து செழுமையாக்கும் வகையில் தென் சீன கடலின் அமைதியையும் நிதானத்தையும் நிலைநிறுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒருமனதாகக் கருத்து தெரிவித்தன.
உதவி என்னும் பெயரில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் தென் சீன கடலின் அமைதி மற்றும் நிதானத்தின் வளர்ச்சிப் போக்கை அசைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.