போப் பிரான்சிஸுக்கு வெள்ளிக்கிழமை உடல்நலன் மோசமடைந்ததாகவும், அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்பட்டது என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது.
போப் ஆண்டவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், 88 வயதான போப் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் சிகிச்சைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் வாடிகன் திருச்சபை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் அவருக்கு சுவாசம் திடீரென மோசமடைய செயற்கை சுவாசம் பொறுத்தவேண்டி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், அவருடைய ஒட்டுமொத்த மருத்துவ நிலையை மதிப்பிடுவதற்கு 24 முதல் 48 மணிநேரம் தேவை என்று தெரிவித்துள்ளனர்.
மோசமடைந்த போப் பிரான்சிஸ் உடல்நிலை, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது
