2025ஆம் ஆண்டு பொருளாதாரப் பணியை ஆய்வு செய்யவும், 2025ஆம் ஆண்டு கட்சிசார் நடத்தை விதிகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான பணிகளை ஏற்பாடு செய்யவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுக் கூட்டம் 9ஆம் நாள் திங்கள்கிழமை நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
நுகர்வை மேம்படுத்தி, முதலீட்டில் லாபத்தை அதிகரித்து, உள்நாட்டுத் தேவையை விரிவாக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பங்களின் புத்தாக்கம் மூலம் புதிய தரமான உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டி, நவீனமயமான தொழிற்துறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புது விதமான நகரமயமாக்கத்தையும் கிராமங்கள் புத்துயிர் பெறும் முன்னேற்றத்தையும் ஒருங்கிணைத்து, நகரப்புறங்களும் கிராமப்புறங்களும் ஒன்றாக சேர்ந்த வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றும் இதில் சுட்டிக்காட்டப்பட்டது.