I
ஜனவரி முதல் பிப்ரவரி வரை, சீனாவில் இருப்புப் பாதை மூலம் 72.6 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இது கடந்த ஆண்டை விட 4.7 விழுக்காடு அதிகமாகும். இது வரலாற்றில் மிக உயர் பதிவாகும். இக்காலத்தில் போக்குவரத்து நிலைமை பாதுகாப்பானது, நிலையானது மற்றும் ஒழுங்காக உள்ளது என்று சீனத் தேசிய ரயில்வே குழும நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகின்றது.
இதில் குவாங்சோ-ஷென்ஜென்-ஹாங்காங் அதிவிரைவு இருப்புப் பாதை, 50 இலட்சத்து 27 ஆயிரம் பயணிகள் எல்லை தாண்டி பயணம் மேற்கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 10.3 விழுக்காடு அதிகமாகும். சீன-லாவோஸ் இருப்புப் பாதை 59 ஆயிரம் பயணிகள் எல்லை தாண்டி பயணம் மேற்கொண்டனர். இது, கடந்த ஆண்டை விட 57.9 விழுக்காடு அதிகமாகும்.