மார்ச் 11ஆம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டத்தில் சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் உள்ளூர் மக்கள் பேரவைகளின் பிரதிநிதிகள் சட்டத்தைத் திருத்தம் கொள்ளும் முடிவு வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சீனாவின் முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகம் புதிய காலடியெடுத்து வைத்துள்ளதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் நேராக மதிப்பிட்டுள்ளன. சீனாவில் ஆளும் கட்சி மற்றும் அரசாங்கத்தையும் மக்களையும் இணைக்கும் பாலமாகத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் பங்காற்றியுள்ளனர். மக்களின் சார்பில் அதிகாரத்தைச் சட்டத்தின்படி செயல்படுத்தி மக்களின் முன்மொழிவு மற்றும் கோரிக்கைகளை அவர்கள் பிரதிபலிக்கின்றனர்.
எகிப்து தொழில்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் முதன்மை பொருளியலாளர் ஹிஷாம் மெட்வாலி கூறுகையில், மக்களின் விருப்பங்களை அரசு புரிந்து கொண்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்வு காண்பது சீன ஜனநாயகத்தின் வெற்றிக்கான திறவுகோலாகும் என்றார்.
ஜனநாயகம் நல்லதா இல்லையா என்பதை மதிப்பிட, அதன் செயல்திறனைப் பார்க்க வேண்டும். முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகத்தை சீனா இடைவிடாமல் மேம்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது. இதன் மூலம், பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றப்பட்டு வருகிறது.