ஒரு திங்கள் காலத்தில் அமெரிக்க பங்கு சந்தையின் மதிப்பில் 4 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க சுங்க வரி கொள்கையின் மீது சர்வதேச சமூகத்தின் பயம் தங்களது பங்கு சந்தையில் பரவி வருகின்றது.
சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் மேற்கொண்ட கருத்து கணிப்பு ஒன்றின் முடிவின் படி, அமெரிக்க புதிய அரசின் சுங்க வரி கொள்கை மீது இக்கணிப்பில் கலந்துகொண்டவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சியின் பாதிப்புக்கு கவலை தெரிவித்தனர்.
பங்கு சந்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் என்று அண்மையில் அமெரிக்க அரசுத் தலைவர் டிராம்ப் தெரிவித்தார். அமெரிக்க பங்கு சந்தையின் மீதான சுங்க வரி கொள்கையின் பாதிப்பைக் குறைப்பது இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று 86.7 விழுக்காட்டு மக்கள் கருத்து தெரிவித்தனர்.