2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு பேராசிரியர் பி.விமலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,, விமலாவின் இலக்கிய பங்களிப்புகளைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், மொழிபெயர்ப்பில் அவரது தொடர்ச்சியான பணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விமலா, எனது ஆணகள் என்ற தலைப்பில் நளினி ஜமீலா எழுதிய என்டே ஆண்கள் என்ற மலையாள புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக இந்த மதிப்புமிக்க விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விமலாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
