“பட்ஜெட் கூட்டத்தொடர் தொடரில் இதையெல்லாம் கேளுங்க”- திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்

Estimated read time 1 min read

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (09-03-2025) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம், தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம், மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி கருணாநிதியும், ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author