சீனாவின் மிக ஆழமான தாரிம் எண்ணெய் வயலில் 6000 மீட்டருக்குக் கீழே 15 கோடி டன் எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தோனண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆண்டில் சீனத் தேசியளவில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு அளவில் 35 விழுக்காட்டிற்குச் சமமாகும்.
தாரிம் வடி நிலத்தின் மிக ஆழமானப் பகுதியில் அதிகளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு மூலவளங்கள் உள்ளன. அண்மையில், இங்கு நிலத்திற்குக் கீழ் 10 ஆயிரத்து 910 மீட்டர் ஆழம் வரை கிணறு ஒன்றைத் துளைக்கப்பட்டது.
உலகிலேயே இவ்வளவு ஆழத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை தோண்டி எடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.