விரைவாக சிந்திக்கக்கூடிய ஊடாடும் மனித உருவ ரோபோவின் புதிய பிராண்ட் சீனாவின் ஷாங்காயில் அறிமுகம் செய்யப்பட்டது.
பல்வேறு செயல்களைச் செய்யும் திறன்களைக் கொண்டுள்ளதால், இந்த புது ரோபோ பரந்த அளவில் கவனங்களை ஈர்த்துள்ளது.
1.3 மீட்டர் உயரமுள்ள இந்த ரோபோ, மிதிவண்டி மற்றும் ஸ்கூட்டர் ஓட்டுவது, சுய-சமநிலை ஸ்கூட்டரை எளிதாக இயக்குவது, ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற சிக்கலான வேலைகளையும் செய்யும் திறன் கொண்டுள்ளது. இது, சீனாவின் ரோபோ துறையில் தொடர்ந்து வெளியாகி வரும் புதிய தயாரிப்புகளில் ஒன்றாகும். அத்துடன், இத்துறையிலான சீனாவின் வளர்ச்சியையும் இது காட்டுகிறது. பல்வகை தகவல்களைக் கையாளும் ஊடாடும் மாதிரியுடன் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த ரோபோ மில்லி-செகன்ட் நேரத்தில் பதிலளிக்க முடிகிறது அத்துடன், மனித முகத்தோற்றம் மற்றும் குரல் தொனி ஆகியவற்றை துல்லியமாகக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்படக் கூடியது. மனிதர்களுடன் உரையாடி, பிரச்சினைகளைத் தீர்த்து, வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியாக மாற்றுவது எனது நோக்கம் என்று அந்த ரோபோட் தெரிவித்துள்ளது.