சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், மார்ச் 12ஆம் நாள் அரசவையின் வழமையான கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.
சீன அரசவையின் 2025ஆம் ஆண்டின் முக்கியப் பணித் திட்டம் இக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல்வேறு பணியகங்கள் மற்றும் பிரிவுகள் முன்முயற்சியுடன் பொறுப்பேற்று, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காடப்பட்டுள்ளது.
மேலும், விரைவஞ்சல் பற்றிய தற்காலிக விதிமுறைகளைத் திருத்துவதற்கான அரசவையின் வரைவுத் தீர்மானமும் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.