வெற்றிமுகத்தில் பாஜக! மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில கருத்து கணிப்புகள் கூறுவதென்ன?

Estimated read time 1 min read

டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் என வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.22% வாக்கு சதவீதமும், ஜார்கண்ட் மாநில 2ஆம் கட்ட தேர்தலில் 67.59% வாக்கு சதவீதமும் பதிவாகியுள்ளன. தேர்தல் நிறைவு பெற்ற பிறகு தேர்தலுக்குக் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா தேர்தல் :

மகாராஷ்டிரா தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) 81 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 59 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

அதே போல காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ் தக்கரே) 95 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 86 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

கருத்து கணிப்புகள் :

ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக கூட்டணி 137 – 157 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் , காங்கிரஸ் கூட்டணி 126 – 146 தொகுதிகளிலும், மற்றவை 2-8 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

CNN செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக கூட்டணி 154 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் , காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Matrize செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக கூட்டணி 150 – 170 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் , காங்கிரஸ் கூட்டணி 110 – 130 தொகுதிகளிலும், மற்றவை 8-10 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் :

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதில், பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அடங்கிய இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளனர்.

கருத்துக்கணிப்பு :

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக கூட்டணி 40-44 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் , JMM – காங்கிரஸ் கூட்டணி 30-40 தொகுதிகளிலும், மற்றவை 1 தொகுதியிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Matrize செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக கூட்டணி 45-50 தொகுதிகள் வரை வெல்லும் என்றும், JMM – காங்கிரஸ் கூட்டணி 222222225-30 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

LiveMint செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக கூட்டணி 42-48 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் , JMM கட்சி 16-23 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 8-14 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author