பண்பாட்டுப் பரவல் மற்றும் வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை


பண்பாட்டுப் பரவல் மற்றும் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை செப்டம்பர் முதல் நாள் ச்சியூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.


சீனப் பண்பாடு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. சீன நாகரிகத்தின் வரலாற்றைப் பன்முகங்களிலும் ஆழமாகவும் அறிந்து கொண்டால் தான், சீனப் பாரம்பரிய பண்பாட்டுக்கான புத்தாக்க வளர்ச்சியையும், சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசப் பண்பாட்டுக் கட்டுமானத்தையும் மேலும் வலிமையுடன் முன்னேற்ற முடியும் என்று இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், தொடர்ச்சி, புத்தாக்கம், ஒருமைப்பாடு, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, அமைதி ஆகியவை, சீன நாகரிகத்தின் முக்கிய தனிச்சிறப்புகளாகும். பண்பாட்டுச் செழுமையைத் தொடர்ச்சியாக முன்னேற்றி, பண்பாட்டு வல்லரசைக் கட்டியமைத்து, சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை உருவாக்குவது என்பது, புதிய யுகத்தில் புதிய கடமையாகும். இதற்காக, பண்பாட்டுக்கான தன்னம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையைப் பின்பற்ற வேண்டும். நேர்மையான கோட்பாடுகளின் அடிப்படையில் புத்தாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author