சீன-வங்காளதேச தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50 ஆண்டு நிறைவு
சீன-வங்காளதேச தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் வங்காளதேச அரசுத் தலைவர் ஷுபும் 4ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
இச்செய்தியில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீனாவும் வங்காளதேசமும் பாரம்பரிய நட்புறவு கொண்ட அண்டை நாடுகளாகும். கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகள் சீன-வங்காளதேச அரசியல் நம்பிக்கை தொடர்ந்து வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை உயர் தரமாக கட்டியமைத்து, பல்வேறு துறைகளின் நடைமுறை ஒத்துழைப்பை விரிவாக்கி, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு இடைவிடாமல் ஆழமாக்கி வருகின்றது. ஷுபுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயத்து, உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் மேலதிக பங்காற்ற விரும்புகிறேன் என்றார்.