வந்தவாசி, மார்ச் 31:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி அமாவாசை உற்சவ குழு நடத்தும் 11 ஆம் ஆண்டு அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாம்பட்டு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் சக்தி உபாசகர் ஆறு.லட்சுமணன் ஸ்வாமிகள் பங்கேற்று பூஜை முறைகளை மேற்கொண்டார்.
மேலும் மூல மூர்த்தி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.
மேலும் யாகசாலை வேள்வி பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிறகு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்று, கோவில் பிரகாரத்தில் மேளதாளத்துடன் வீதியுலா வந்தார்.
இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.