சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய வானஸின் அறியாமை

சீனாவைக் குறுவிவசாயியாக அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் மோசமாக கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்கச் செய்தி ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு கூறினார். இதற்குப் பிறகு, அது உடனடியாக வெளிநாட்டு சமூக இணையத்தளங்களில் பெரிய அளவில் ஏளனத்தைப் பெற்றது.

சீனா மீதான வான்ஸின் ஆக்கிரமிப்பு கருத்துக்கள், உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களையும் அவமானப்படுத்துகிறது என்று சில அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன.

வான்ஸ் வேண்டுமென்றே வெளிக்காட்டியுள்ள கடினமான தோற்றத் தன்மை, உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பது ஆகியவை எதிர்காலத்தில் தனது பணி வளர்ச்சிக்கான பாதையைத் திறப்பதற்காகும்.

அரசியல் அறிவியல் மற்றும் தத்துவம் இளங்கலை பட்டத்தையும் சட்டயியல் முனைவர் பட்டத்தையும் வான்ஸ் பெற்றார். மேலும், துணிகர முதலீட்டு நிறுவனத்தை வான்ஸ் நிறுவினார். சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அவரின் அறியாமை வியப்பளிக்கிறது.

அமெரிக்காவின் உள்நாட்டு முரண்பாடுகளைத் தீர்க்க முடியாதபோது, வெளிப்புற பலிகடாக்களைத் தேடுவது அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு அவசியமாகிறது.

அமெரிக்க “இணையத்தளப் பயன்பாட்டாளர்களிடமிருந்து” வான்ஸ் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் பார்த்ததையும் கேட்டதையும் பயன்படுத்தி, அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் உண்மையான சீனாவைப் பற்றி

அறிமுகப்படுத்தினர்.

அமெரிக்க விதிமுறைகள் உலக விதிமுறைகள் அல்ல, அமெரிக்க மேலாதிக்கம் விரும்பியபடி உலகைக் கையாள முடியாது என்பதை வான்ஸ் உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு கண்களைத் திறந்து உலகைப் பார்க்க வேண்டும்.

You May Also Like

More From Author