சீனத் தேசிய குடிவரவு நிர்வாகம் 20ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 20ஆம் நாள் முதல், கிர்கிஸ்தான், வியட்நாம் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும், சீனாவைக் கடந்து வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குச் செல்லும் போது, விசா தேவையில்லா நிலைமையுடன் சீனாவில் 240 மணி நேரம் தங்கியிருக்கலாம். தவிரவும், ஹைய்நான் மாநிலத்தில் 30 நாட்கள் வரை தங்கலாம்.
இது பற்றி இந்நிர்வாகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இத்தகைய 2 கொள்கைகள், உயர் தரமுள்ள வெளிநாட்டுத் திறப்புப் பணியை நிதானமாக விரைவுபடுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளாகும் என்றார்.
