சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஏப்ரல் 8ஆம் நாள் பிற்பகல் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
அப்போது லீ ச்சியாங் கூறுகையில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கத்துக்காக ஆதரவாக பேசுபவர்களாகும், உலக வர்த்தக அமைப்பின் உறுதியான பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்களாகவும் உள்ளன. நாம் ஒன்றுக்குஒன்று பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, இரு தரப்புகள் மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக நிதானத்தையும் உறுதியையும் ஊட்ட வேண்டும் என்றார்.
உர்சுலா வோன் டெர் லேயன் கூறுகையில், சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் கூட்டாகக் கொண்டாடவும், உரிய நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனத் தலைவர்கள் இடையே புதிய சந்திப்பு நடத்தவும் வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விருப்பம் தெரிவிக்கின்றது. நியாயமான மற்றும் சுதந்திரமான பலதரப்பு வர்த்தக முறைமை, இரு தரப்புகள் மற்றும் உலகின் கூட்டு நலன்களுக்குப் பொருந்தியதாக விளங்குகின்றது என்றார்.