சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த இத்தாலி அரசுத் தலைவர் செர்ஜியோ மேட்டரெல்லாவுடன் நவம்பர் 8ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-இத்தாலி பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவாகும். ஜூலை திங்கள், தலைமையமைச்சர் ஜார்ஜியா மெலோனி அம்மையார் சீனாவில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை இரு தரப்பும் வெளிப்படுத்தி, இரு தரப்புறவு புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழைவதை முன்னேற்ற ஒப்புக்கொண்டன. உங்கள் சீனப் பயணம், சீன-இத்தாலி உறவுக்கு மேலும் வலிமையான இயக்காற்றலை ஊட்டி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மை புரிய நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு, மார்கோ போலோ மரணமடைந்த 700ஆவது ஆண்டு நிறைவாகவும் திகழ்கிறது. 13வது நூற்றாண்டில், சீனாவை அறிந்து கொண்ட வாயிலை அவர் மேலை நாடுகளுக்குத் திறந்து வைத்தார். அவரது ஊக்கத்துடன், தலைமுறை தலைமுறையான நட்பார்ந்த தூதர்கள், கீழை மற்றும் மேலை நாடுகளின் நாகரிகப் பரிமாற்றத்துக்குப் பங்காற்றி வருகின்றனர். சீனாவும் இத்தாலியும், திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய பாரம்பரியங்களைப் பரவல் செய்து, இணக்கமான மற்றும் ஒத்துழைப்பான உலகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.