வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையில், ஷாங்காயில் முதல் கோடைகால சர்வதேச நுகர்வுப் பருவம் அண்மையில் தொடங்கியுள்ளது. ஷாங்காய் கோடைகால சர்வதேச நுகர்வு பருவம், வலுமையான சர்வதேச ஈர்ப்பாற்றலை கொண்டுள்ளது.
இந்நிகழ்வில்,எகிப்தின் தொன்மையான பிரமிடு நாகரிகக் கண்காட்சி, ஷாங்காயில் நடைப்பயணம், முதலாவது ஷாங்காய் சர்வதேச ஒளி விழா உள்ளிட்ட 7 முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதலாவது ஷாங்காய் சர்வதேச சொகுசு கப்பல் திருவிழா ஆகஸ்ட் 2ஆம் நாள் தொடங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஷாங்காயில் சொகுசு கப்பல் துறைமுகத்தின் மூலம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் 126 கப்பல்கள் கையாளப்பட்டுள்ளன மற்றும் 6 லட்சத்து 30ஆயிரம் பயணிகள் உபசரிக்கப்பட்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் ஜூன் வரை, ஷாங்காய்க்கு வருகை தந்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 20.35 லட்சம் ஆக உள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.8 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும்,போக்குவரத்து, தங்கும் இடம், பார்வையிடுதல், உணவு, பொருள்கள் வாங்குதல் ஆகிய துறைகளில் சுற்றுலாப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய, விரிவான சேவைக்கான உத்தரவாதத்தை ஷாங்காய் வலுப்படுத்தி வருகிறது.