சீன ஊடகக் குழுமமும், ஷான்தொங் மாநில அரசும் இணைந்து ஏற்பாடு செய்த 4வது சி.எம்.ஜி கருத்தரங்கு ஏப்ரல் 25ஆம் நால் ஷான்தொங் மாநிலத்தின் ச்சுஃபூ நகரில் நடைபெற்றது.
“பரிமாற்றம், பரஸ்பர கற்றல், அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு மற்றும் வளர்ச்சியில் நாகரிகத்தின் ஆற்றல்” என்பது, நடப்புக் கருத்தரங்கின் தலைப்பாகும். 95 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சர்வதேச அமைப்புகள், ஊடகங்கள், சிந்தனைக் கிடங்குகள், நாடு கடந்த தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளின் சுமார் 300 பேர் இணைய வழியாகவும் நேரடியாகவும் இக்கருத்தரங்கில் பங்கெடுத்தனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடன் நாகரிகப் பரிமாற்ற மேடையை உருவாக்குவது, இக்கருத்தரங்கின் நோக்கமாகும். சீனா முன்வைத்த உலக நாகரிக முன்மொழிவு, உலகத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும், சிந்தனை, கலை, தொழில் நுட்பம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்ட பரப்பை சீன ஊடகக் குழுமம் தொடர்ந்து ஆழமாக்கி, பல்வேறு நாடுகளின் நண்பர்களுடன், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நாகரிக ஆற்றலை ஊட்டி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.