14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்துக்க்கான சீன மத்திய நிதியில் எல்லை பிரதேசக் கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2520 கோடி யுவான் ஒத்துக்கிவைக்கப்பட்டுள்ளது. இது தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் துறை, சிறுபாண்மை தேசிய கைவினைத் தொழில் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட உள்ளூர் பிரதேச மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது.
மேலும், எல்லைப் பிரதேசத்தின் தொழில் துறைகளை பெரிதும் வளர்த்து, அரசு சாரா நிறுவனங்கள் எல்லை பிரதேசகளில் முதலீடு செய்வதை ஊக்குவித்து, சிறுபாண்மை தேசிய கைவினைத் தொழில் சின்னங்களை முன்னேற்றி, எல்லைப் பிரதேசத்தின் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீன மக்கள் குடியரசின் தேசிய இன விவகார ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.