ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 11 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 8.52 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 102 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

You May Also Like

More From Author