சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 28ம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது வாங் யீ கூறுகையில், சர்வதேச நிலைமை மாறி வரும் நிலையில், சீனாவும் ரஷியாவும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் ஆதரவு அளிப்பதில் ஊன்றி நிற்கின்றன. தற்போது ஒருசார்பு மற்றும் பலதரப்புக்குமிடையில் போராட்டம் தீவிரமாகி வருகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும், மென்மேலும் முக்கியமான நெடுநோக்கு மதிப்பை வெளிக்காட்டுகின்றன.
சீனாவும் ரஷியாவும், பிரிக்ஸ் கட்டுக்கோப்புக்குள் ஒருங்கிணைப்பை அதிகரித்து, வளரும் நாடுகள் மற்றும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டுள்ள பொருளாதாரங்களுடன் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
லாவ்ரோவ் உக்ரைன் நெருக்கடியின் புதிய நிலைமையை அறிமுகப்படுத்தினார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, சீனாவின் கோட்பாட்டையும் நிலைப்பாட்டையும் வாங் யீ விளக்கிக் கூறினார்.