2024-ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 134.9இலட்சம் கோடி யுவானை எட்டி, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 5 சதவீதம் அதிகரிப்பு அடைந்துள்ளதாக சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 17-ஆம் நாள் தெரிவித்துள்ளது.
இது குறித்து, பெரும்பாலான வெளிநாட்டு ஊடகங்கள், “எதிர்பார்ப்புகளைத் தாண்டிய வளர்ச்சியை எட்டியுள்ளதாக மதிப்பீடு செய்துள்ளன.
வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் உள்புற இன்னல்களின் அதிகரிப்பை எதிர்கொண்ட கடினமான சூழ்நிலையில், சீனா முழு ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை நிறைவேற்றியுள்ளது என்பது பாராட்டத்தக்கது. கடந்த ஆண்டில் சீனா அறிவியல், வலிமை, பயன் ஆகியவற்றைக் கொண்ட ஒட்டுமொத்த கட்டுபாட்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது தான் இதற்கு காரணம் என்று சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் பொருளியல் கல்லூரி பேராச்சிரியர் வாங் சியெள சொங் கருத்து தெரிவித்தார்.
தனது வலுவான உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலி, வெளிநாட்டு திறப்பு கொள்கைகள் ஆகியவற்றின் மூலம், சீனா பல்வேறு நாடுகளுடன் நட்பு ஒத்துழைப்பை நிலைநிறுத்தி, வெளிப்புற இடர்பாடுகளை தடுத்தது. வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சியை முன்னெடுப்பதோடு, சீனா தொடர்ந்து உலகத்துடன் தனது சந்தை வாய்ப்புகளை கூட்டாக பகிர்ந்து கொள்கின்றது.
உள்புறத்திலிருந்து பார்த்தால், சீனப் பொருளாதாரம் சில புதிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எடுத்துக்காடாக, கடந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளின் பொருளாதார செயல்பாட்டுக்கான அழுத்தம் அதிகமாகியது. இதனைச் சமாளிக்க, சீன அரசு காலதாமதமின்றி கட்டுபாட்டு கொள்கைகளை அறிமுகப்படுத்தியதற்குப் பின், 4ஆவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி மீட்சியடைந்தது. இது, கடந்த ஆண்டின் இலக்கை நிறைவேற்றியதற்கு பங்காற்றியது.
இந்த கொள்கைகள் அமருக்கு வந்ததுடன், 2024-ஆம் ஆண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆற்றல் ஆதாரம் இருந்தது.
சீனாவின் பொருளாதாரத்தின் “நிலைத்தன்மை”, உலகின் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது, மேலும் சீனாவின் பொருளாதாரத்தின் “முன்னேற்றம்”, உலகையும் முன்னேற்றி வருகிறது.