சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

Estimated read time 1 min read

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 9:55 முதல் 10:19 மணிக்குள், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

கொடிமரத்தில் புனிதமான கொடி ஏற்றப்படுவதற்கு முன், சிறப்பு பூஜைகள் மற்றும் மந்திரங்கள் சொல்லப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்நன்னாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

சித்திரைத் திருவிழாவில் மே 6-இல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 8-இல் மீனாட்சி திருக்கல்யாணம், மே 9இல் தேரோட்டம் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண இன்று முதல் மே 2-ஆம் தேதி வரை கட்டணச் சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விழாவின் முக்கிய அம்சங்கள்:

ஏப்ரல் 29 (செவ்வாய்): கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்.

மே 6 (செவ்வாய்): மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம், இதில் மீனாட்சி மதுரையின் அரசியாக முடிசூடப்படுகிறார்.

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாகும். இந்த நாளில் பக்தர்கள் திருமண வைபவத்தைக் காண கூடுவர், மேலும் பல பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வர்.

மே 9 (வெள்ளி): மீனாட்சி திருத்தேரோட்டம், இதில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்கத் தேரில் பவனி வருவர். தேர் சுமார் 14.5 அடி உயரமும், 6.964 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படும்.

மே 10 (சனி): கள்ளழகர் புறப்பாடு, இதில் அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி பயணம் தொடங்குவார்.

மே 11 (ஞாயிறு): கள்ளழகர் எதிர்சேவை, இதில் கள்ளழகர் மதுரையில் பக்தர்களால் வரவேற்கப்படுவார்.

மே 12 (திங்கள்): கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், இது திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் கரையில் கூடுவர்.

Please follow and like us:

You May Also Like

More From Author