ஐஐடி- பாம்பே (IIT-B), நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உடன் ஒரு பார்ட்னெர்ஷிப் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கை, இந்தியாவின் முதல் குவாண்டம் டயமண்ட் மைக்ரோசிப் இமேஜரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த புதுமையான தொழில்நுட்பமானது, மருத்துவமனை எம்ஆர்ஐ நடைமுறைகளைப் போலவே, ஆக்கிரமிப்பு அல்லாத மற்றும் அழிவில்லாத செமிகண்டக்டர்களின் மேப்பிங்கை அனுமதிக்கும்.