பாரிஸ் : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரின் இன்றைய 3-ஆம் நாளில் இந்திய அணியில் தொடர்ச்சியாக 6 பதக்கப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
பாரிஸ் நகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பராமலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், நேற்று நடைபெற்ற இந்திய அணி போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை ஒரே நாளில் வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் பதக்ககங்களை இந்தியா கைவசப்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100மீ. பாரா ஓட்டப்பந்தய போட்டியில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், பெண்களுக்கான 10மீ. ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகரா தங்கப்பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலப் பதக்கமும் வென்றனர். அதன்பின், மாலை நடைபெற்ற 10மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் மணிஷ் நர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
நேற்றைய நாள் போலவே இன்றைக்கும் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக பலப்போட்டிகள் நடைபெற உள்ளது. அதில், குறிப்பாக 6 பதக்கப் போட்டிகளில் இந்திய அணி வீரர்/ வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். இதனால், இன்றைய நாளும் பாராலிம்பிக்கில் இந்திய போட்டியாளர்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்திய அணியின் பதக்கப்போட்டிகள் :
3:45 மணி – பாரா ஷூட்டிங் – ஆர்1 – ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச்1 இறுதிப் போட்டி – ஸ்வரூப் மஹாவீர் உன்ஹல்கர்.
05:05 மணி – பாரா சைக்கிள் ஓட்டுதல் தடம் – பெண்களுக்கான சி1-3 500 மீட்டர் டைம் ட்ரையல் பைனல் – ஜோதி கதேரியா
05:32 மணி – பாரா சைக்கிள் ஓட்டுதல் தடம் – ஆண்கள் சி1-3 1000 மீட்டர் டைம் ட்ரையல் இறுதி – அர்ஷத் ஷேக்
18:15 மணி – பாரா ஷூட்டிங் – பி2 – பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பைனல் – ரூபினா பிரான்சிஸ்
19:00 மணி – பாரா வில்வித்தை – பெண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன், 1/8 எலிமினேஷன் – சரிதா vs எலியோனோரா சார்த்தி
10:30 மணி – பாரா தடகளம் – ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F57 இறுதிப் போட்டி – பர்வீன் குமார்
11:30 மணி – பாரா வில்வித்தை – பெண்களுக்கான தனிப்பட்ட கூட்டு திறந்த பதக்க சுற்றுகள் – சரிதா, ஷீத்தல் தேவி (தகுதிக்கு உட்பட்டது)