ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை, பாகிஸ்தானவர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சமீபத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து பயங்கர ஆயுதங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை பாதுகாப்புத்துறை செயலருடன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா-பாக். இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
