உலக வளர்ச்சி திட்டப்பணி தொகுப்பின் கீழ் 1800க்கும் மேலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான 8 முக்கிய ஒத்துழைப்புத் துறைகளையும், ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளையும் இவை உள்ளடக்கியுள்ளன என்று சீன சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவன செய்தித்தொடர்பாளர் டாங்யீங் ஜூன் 30ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளில், உலக வளர்ச்சி திட்டப்பணி தொகுப்பின் கட்டுமானத்தில் நூற்றுக்கணக்கான ஒத்துழைப்பு தரப்புகள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துள்ளன.
உலகளாவிய தெற்கு நாடுகளில் எண்ணியல்மயமாக்கத்தை ஊக்குவிக்கும் திட்டப்பணியை, சீனா, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புக் கூட்டாளிகளுடன் இணைந்து உருவாக்க வருவதாக குறிப்பிட்ட அவர், மேலதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புக் கூட்டாளிகள் உலக வளர்ச்சி திட்டப்பணி தொகுப்பின் கட்டுமானத்தில் பங்கெடுக்க சீனா வரவேற்பதகாவும் தெரிவித்தார்.
