தவெக சார்பில் நடைபெறவுள்ள ஆதரவு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தவெக சார்பில் ஆதரவு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நாளை நடைபெறுகிறது. இதற்கான அழைப்புக் கடிதத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேரில் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அழைப்பிதழ் வழங்கியதற்காக மதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்போம் என்று தவெக நிர்வாகிகளிடம் கூறியதாகவும் வைகோ தெரிவித்தார்.
