அமெரிக்காவின் தூதாண்மை கொள்கைகளுக்கு உலகம் குற்றச்சாட்டு

உலகளவில் அமெரிக்கா சுங்க வரி போர் தொடுத்துள்ள அதேவேளையில், பல நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் உள்ளன.

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பின்படி, சீனாவுடனான வர்த்தகத்திலிருந்து மேலதிக நலன்களைப் பெறலாம் என்று 51.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் புதிய அரசு நம்பத்தகுந்ததாக இல்லை என்று இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்த ஐரோப்பாவைச் சேர்ந்த 48.1 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், அமெரிக்காவின் உள் விவகார மற்றும் தூதாண்மை கொள்கைகள் வேறு நாடுகளின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைக் கடுமையாகச் சீர்குலைக்கும் வகையில் உள்ளன என்று 62.9 விழுக்காட்டினர் குற்றச்சாட்டினர்.

அமெரிக்காவின் பொருளாதார தாக்குதலுக்கு உறுதியான பதில் நடவடிக்கை எடுத்துள்ள சீனா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது, சீனாவின் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக 35.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

உலகளாவிய 41 நாடுகளைச் சேர்ந்த 31004 பேர் இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தனர்.

You May Also Like

More From Author