பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பாகிஸ்தான் திரும்பவும் அத்துமீறி ஏதேனும் செய்தால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
சமீபத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கும் இடையே ராணுவ பதட்டங்கள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களுக்கும் இந்தியா உரிய பதிலடி கொடுத்தது.
இதன்பின்னர், சனிக்கிழமை (மே 10) பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இரு தரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இனியொருமுறை அத்துமீறினால்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி வார்னிங்
