ரியல் எஸ்டேட் ஆணையம் கொண்டு வந்த புதிய நிபந்தனை; மீறினால் லட்சங்களில் அபராதம்!

Estimated read time 0 min read

ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு:

ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்த விபரங்களை, கட்டுமான நிறுவனங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். கட்டுமான நிறுவனங்கள், இந்த விதிகளை மீறியது உறுதியாகும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் கட்டுமான திட்டங்கள், அதன் மதிப்பு அடிப்படையில், இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிறிய திட்டங்களில், 100 கோடி ரூபாய் வரையிலான மதிப்புள்ள திட்டங்களுக்கு, 50,000 ரூபாய்; 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பு திட்டங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பெரிய திட்டங்கள் பிரிவில், 100 கோடி ரூபாய் மதிப்பு வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, 2 லட்சம் ரூபாய்; 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author