இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக்கு கோட்டில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது.
பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நிலைகளை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுத்த நிலையில், அனைத்தையும் முறியடித்த இந்திய பாதுகாப்புப் படைகள், அதன் பின்னர் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மற்றும் முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்கியது.
இந்திய ராணுவ DGMO செய்தியாளர் சந்திப்பு
