ஜப்பானின் இராணுவ விரிவாக்கம், ஜப்பான்-அமெரிக்க இராணுவ ஒருமைப்பாடு முதலியவற்றை குற்றஞ்சாட்டி வருகின்ற ஜப்பானிய ஊடக வியலாளர் தோஷிஹிரோ யோஷிடா ஜூன் 28ஆம் நாள் கூறுகையில், நீண்டகாலமாக, ஜப்பான்-அமெரிக்க இராணுவக் கூட்டணி, ஜப்பானின் அரசியல் அமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்து வருகிறது. ஜப்பான் அரசு இந்தப் போக்கினைச் சரிசெய்ய முடியாமல் இருப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து இராணுவ விரிவாக்கத்தை முன்னேற்றி வருகிறது. ஜப்பான் மீண்டும் போர் புரியும் நாடாக மாற வாய்ப்புள்ளது என்றார்.
ஜப்பானின் “ச்சொங்ச்சிங் குண்டுவெடிப்பு நினைவு மற்றும் மரபுரிமை சங்கம்”நடத்திய சொற்போழிவுக் கூட்டம் 28ஆம் நாள் டோக்கியோவில் நடைபெற்றது. நீண்டகாலப் போர் திறனை உயர்த்துதல், தொலை தூர எவுகணைகளை அமைத்தல், தற்காப்பு சாதனங்களின் உற்பத்தித் தொழிற்சாலைகள் அரசுடைமையாக்கத்தை முன்னேற்றுதல் முதலியவை பற்றிய அரசின் செயல்களை, தோஷிஹிரோ யோஷிடா தொகுத்து எடுத்துக்கூறினார். அதோடு, சனே தகைச்சி அரசு மேற்கொண்ட இராணுவ விரிவாக்க கொள்கை, பிரதேசப் பாதுகாப்புக்கு உதவி செயவதற்கு மாறாக, பிரதேசத்தில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
