ச்சிலின் பல்கலைக்கழகத்திற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 16ஆம் நாள், ச்சிலின் பல்கலைக்கழகத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் முதலியோருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

வாழ்த்து கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில்,

புதிய துவக்கப் புள்ளியில், புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையின்படி, பன்நோக்கு மேம்பாடுகளை பரப்பி, தேசிய நெடுநோக்குத் தேவைகளில் கவனம் செலுத்தி, கல்வித் துறைகள் மற்றும் பாடப்பிரிவின் அமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி, கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையை உயர்த்தி, மேலதிகமான உயர்தர திறமைசாலிகளை வளர்த்து, புதிய யுகத்தில் வட கிழக்கு சீனாவின் பன்முக மறுமலர்ச்சியையும் சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தையும் விரைவுபடுத்துவதற்கு மேலும் பங்காற்ற வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author