17ஆம் தேதி தக் லைப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது 

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை உலக நாயகன் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இவரது நடிப்பில் கடைசியாக சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.

இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் ‘தக் லைப்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த தேதி வெளியாகி உள்ளது. அதன்படி வருகிறார் 17ஆம் தேதி தக் லைப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

மேலும் வரும் 24ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் லைவ் பர்ஃபார்மென்ஸ் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author