
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அக்டோபர் 27 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக ஈடுகட்டும் வகையில் நவம்பர் 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
