அரபு லீக் உச்சி மாநாட்டுக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து

மே 17ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அரபு லீக் உச்சி மாநாட்டின் நடப்பு தலைவரான ஈராக் அரசுத் தலைவர் லஹீதுக்கு செய்தி அனுப்பி, 34ஆவது அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இச்செய்தியில் அவர் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில் சீன-அரபு நாட்டு உறவு செழுமையாக வளர்ந்து வருகின்றது. வளரும் நாடுகளின் ஒத்துழைப்பின் முன்மாதிரியாக இது விளங்குகின்றது. எதிர்காலத்தில், அரபு நாடுகளின் நம்பத்தக்க நண்பராகவும் கூட்டாளியாகவும் சீனா திகழ்கின்றது.

அரபு நாடுகளின் நேர்மையான இலட்சியத்திற்கு சீனா ஆதரவு அளித்து வருகின்றது. அரபு நாடுகளுடன் இணைந்து, அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை முன்னேற்றி, மனித பண்பாட்டு தொடர்பை மேம்படுத்தி, உயர் நிலை சீன-அரபு பொது சமூகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகின்றது என்றார்.

You May Also Like

More From Author