இரு தரப்புப் பிரச்சினையை சிக்கலாக்கும் பிலிப்பைன்ஸின் முயற்சி

பிலிப்பைன் அரசுத் தலைவர் மார்கோஸ் அண்மையில் வியட்நாம் நாட்டில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையேயான அரசுரிமை சர்ச்சை பற்றி கவலைப்படுவதாக அவர் தெரிவித்தார்.


பிலிப்பைன் மற்றும் வியட்நாம் அரசுகள், இரண்டு புரிந்துணர்வு குறிப்பாணைகளில் கையெழுத்திட்டன. தவிர, நேரடி தொடர்பு வழியையும், கடலோர காவல் படை கூட்டு குழுவையும் நிறுவ ஒப்புக்கொண்டன.

பிலிப்பைன்ஸ், பாதுகாப்பு பிரச்சினையைச் சாக்குப்போக்காக கொண்டு, தென் சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக, சில நாடுகளை இணைத்து, சீனா மீது மேலதிக அழுத்தத்தை நிர்பந்திக்க முயல்கிறது. தென் சீனக் கடல் பிரச்சினையில் பிலிப்பைன்ஸின் புதிய செயல் இதுவாகும் என்று தொடர்புடைய நிபுணர் கருத்து தெரிவித்தார்.


கடந்த ஆண்டு முதல் சீனாவின் ஹுவாங் யன் தீவு மற்றும் ரென் ஐ பாறையின் அருகில் உள்ள கடற்பரப்பில் பிலிப்பைன்ஸ் அடிக்கடி சட்டவிரோதமாக நுழைந்தது. அது மட்டுமல்ல, ரென் ஐ பாறை பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டு நின்ற ராணுவ கப்பலுக்கு கட்டிடப் பொருட்களை இது வழங்கி, ரென் ஐ பாறையை நிரந்தரமாக கைப்பற்ற முயற்சிக்கின்றது.


ஒரு புறம், தென் சீனக் கடல் பிரச்சினையில் பிலிப்பைன்ஸ் ஆத்திரமூட்டல் செயலை மேற்கொள்கிறது. மறுபுறம், சீனாவை எதிர்ப்பதில் சில நாடுகளை இணைக்க முயற்சிக்கிறது. அமெரிக்காவின் அனுமதியுடன், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் மேற்கொண்டு வருகிறது.

தனது ஆற்றலைச் சார்ந்து, சீனாவுடன் பகைமையில் ஈடுபடுவது எளிமையாக இல்லை என பிலிப்பைன்ஸ் புரிந்து கொண்டுள்ளாதல், இதர நாடுகளை இணைக்க முயல்கின்றது. அதே வேளையில் சீனாவுக்கும் இதர ஆசியான் நாடுகளுக்குமிடையே தொல்லையை உருவாக்குகின்றது.


இரு தரப்புப் பிரச்சினையைப் பலதரப்புமயமாக்குவது, பிலிப்பைன்ஸின் நோக்கமாகும். பிலிப்பைன்ஸ் சர்ச்சையை சிக்கலாக்கி, விரிவாக்குவது மட்டுமல்ல, தென் சீனக் கடல் தொடர்பான பல்வேறு தரப்புகளின் செயல் அறிக்கையை மீறி, இப்பிரதேசத்தின் நாடுகளின் முந்தைய கூட்டு முயற்சிகளைச் சீர்குலைத்துள்ளது.


ஹாவாங் யன் தீவு மற்றும் ரென் ஐ பாறை, சீனாவுக்குரிய உரிமை பிரதேசமாகும். கடந்த பல ஆண்டுகளாக, பிலிப்பைன்ஸ் மீண்டும் மீண்டும் ஆத்திரமூட்டி வருகிறது.

சீனா பெரும் கட்டுப்பாட்டுடனும் பொறுமையுடனும் செயல்பட்டு வருகிறது. தற்போது பிலிப்பைன்ஸ் ஆபத்தான செயல்களை மேற்கொண்டு, இரு தரப்புப் பிரச்சினையை விரிவாக்க முயற்சிப்பது, தன் நீண்டகால நலன்களைச் சீர்குலைக்க நேரிடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author