சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த “வசந்த காலத்தில் சீனா: சீனாவின் வாய்ப்புகள் மற்றும் உலகத்துடன் பகிர்வு” என்ற உலகளாவிய பேச்சுவார்த்தையின் சிறப்பு கூட்டம் அண்மையில் துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் நடைபெற்றது.
இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், சர்வதேச முதல் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த பரவல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க மேம்பாடுகளை சீன ஊடகக் குழுமம் வெளிக்கொணர்ந்து, உலக நண்பர்களுடன் இணைந்து சீனப் பாணி நவீனமயமாக்கல் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றது என்றார்.
மேலும், துருக்கிக்கான சீனத் தூதர் ஜியாங் சூபின், துருக்கின் மத்திய கிழக்கு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டெமிஸ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.