ரோபோ சங்கர் மறைவு பேரிழப்பு! நடிகர் சிம்பு வேதனை..!

Estimated read time 1 min read

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் தான் ரோபோ ஷங்கர். அதன் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன் திறமையை நிரூபித்து வெள்ளித்திரைக்கு வந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பே ஒரு சில படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக ரோபோ ஷங்கர் நடித்திருந்தார் என்ற தகவலும் உண்டு.

இருந்தாலும் அவருக்கு திரைத்துறையில் ஒரு நடிகராக நல்ல அங்கீகாரம் பெற்று தந்த திரைப்படம் என்றால் அது வாயை மூடி பேசவும் மற்றும் மாரி ஆகிய திரைப்படங்கள் தான். குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தில் ரோபோ ஷங்கர் படம் முழுக்க வந்து நம்மை சிரிக்க வைத்திருந்தார். அதன் மூலம் கோலிவுட்டின் பிசியாக காமெடி நடிகரானார் ரோபோ ஷங்கர்.

அதன் பிறகு விஜய், அஜித், சிவகார்த்திகேயன், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வந்த ரோபோ ஷங்கர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். மஞ்சகாமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் குணமடைந்தார். அதன் பின்னர் தொடர்ந்து தன் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த ரோபோ ஷங்கர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

திடீரென அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தது. ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை போன்ற காரணங்களால் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகின்றது. இம்முறையும் ரோபோ ஷங்கர் மீண்டும் உடல்நலம் தேறி வருவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இந்த நிலையில் ரோபோ சங்கரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் சிலம்பரசன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author