சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட 13 ரயில் நிலையங்களுடன் 15.46 கி.மீ. தூரத்துக்கு திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகளுக்காக ரூ.1,964 கோடி ஒதுக்கி நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.