சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 18832, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. உண்மையாக பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 32078 கோடி யுவானாகும்.
இதில், மின்னணு வணிக அலுவலின் சேவைத் தொழில், விமான மற்றும் விண்வெளி சாதனங்களின் தயாரிப்புத் தொழில், வேதியியல் பொருட்களின் தயாரிப்புத் தொழில், மருத்துவக் கருவிகள் மற்றும் சாதனங்களின் தயாரிப்புத் தொழில் ஆகிய துறைகளில் உண்மையாக பயன்படுத்தப்பட்ட முதலீட்டுத் தொகை முறையே 137, 86.2, 57.8 மற்றும் 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், சீனாவின் மீது ஆசியான் நாடுகளின் முதலீட்டுத் தொகை 42.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் முதலீட்டுத் தொகை முறையே 74.2, 68.4, 54.6, 22.3 மற்றும் 12.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.